போதைப் பொருள் பாவனைக்கு எதிராக அரச உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Rusath in சமூகம்

போதைப் பொருள் பாவனைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையில் கடமை புரியும் அரச உத்தியோகஸ்தர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போதை அற்ற உலகம் என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது புகையிலையை நிறுத்தி புதுயுகம் படைப்போம், புகை மனிதனுக்குப் பகை, கிழக்கில் போதைக்கான ஒரு நாள் செலவு நாற்பது இலட்சம் ரூபா, மனிதா விழி.! மதுவை ஒழி, மதுவின் வாசம் மரணத்தின் சத்தம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வாகனங்களுக்கும், போதை அற்ற உலகம் என்ற இஸ்ற்றிக்கர்களும் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers