வவுனியாவில் இடம்பெற்ற சமுர்த்தி விற்பனை கண்காட்சி

Report Print Thileepan Thileepan in சமூகம்

புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி விற்பனை கண்காட்சி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச செயலாளர் கா.உதயராயா தலைமையில் இன்று நடைபெற்றது.

புதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி பொருட்களை ஒரே இடத்தில் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளும் படியாக சமுர்த்தி பயனாளர்களினால் மேற்படி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மரக்கறி , பழவகை, தானிய வகைகள், ஆடை அணிகலன்கள், கைவினைப் பொருட்கள் , பனை உற்பத்தி பொருட்கள், போன்றன காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது.

இந்தநிகழ்வில் முதன்மை விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக உதவிபிரதேச செயலர் ச.பிரியதர்சினி, சமுர்தி தலைமை பீட முகாமையாளர் ச.சந்திரகுமார் ,வடமாகாண தொழில் துறை திணைக்களத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers