சிறுமியின் கையைப் பிடித்தவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சேருவில பகுதியில் பெண்ணொருவரின் கையைப் பாலியல் ரீதியில் பிடித்த ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக சேருவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சேருவில, கல்லாறு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பதினைந்து வயதுடைய சிறுமியை காதலிப்பது போல் நடித்து ஆசையை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றதாக சிறுமின் உறவினர்கள் சேருவில பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த இளைஞனைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சேருவில கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.