கனிய மணல் அகழ்வை நிறுத்தக்கோாி வாகரையில் ஆர்ப்பாட்டம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் கனிய மண் அகழ்வு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்துமாறு வலியுறுத்தி இரண்டாவது தடவையாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் பிரதேச மக்களால் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கதிரவெளி பிரதேச பொதுமக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருமலை வீதியில் கூடிய பொதுமக்கள் வாகன பேரணியாக கதிரவெளியூடாக சென்று பணிச்சங்கங்கேணி பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் வாகரை பிரதான வீதி ஊடாக வாகரை பிரதேச செயலகத்தினை சென்றடைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கனிய மணல் தொழிற்சாலை அமைப்பதினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி,புதூர்,புச்சாக்கேணி,ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கனிய மணல் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்ப வேலைகள் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அரச அதிகாரிகளே, அரசியல்வாதிகளே, எமது பிரதேச மக்களை பாதிக்க கூடிய கனிய மணல்(இல்மனைட்) அகழ்வு பணியினை உடனடியாக தடுத்து நிறுத்தங்கள். எமது தாய் மண் எங்களை வாழ வைக்கும் மண். எங்களுக்கு சோறு போடும் மண்ணை விற்காதே விற்காதே தாய் மண்ணை விற்க்காதே. இல்மனைட் கம்பனியை தடை செய், சுரண்டாதே சுரண்டாதே எங்களின் வளத்தை சுரண்டாதே என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச செயலாளர் எஸ்.கரனிடம் கையளித்துள்ளதுடன், இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers