தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு புத்துயிர் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Vamathevan in சமூகம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டி சவாரி மன்றத்தினை யாழ். மாவட்ட சங்கமாக பதிவு செய்யப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் புத்துயிர் அளித்துள்ளார்.

நல்லூர் - கோவில் வீதியில் மக்கள் குறைகேள் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ். மாவட்ட சவாரி சங்கத்திற்கான அனுமதியை சவாரி சங்கத்தின் உபதலைவர் நித்தியானந்தம் கிருஷ்ணமூர்த்தியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கையளித்துள்ளார்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை உதயசீலன், யாழ். காரியாலய இணைப்பாளர் பிரதாப் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers