கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் நிறுவன நாள் கொண்டாட்டம்

Report Print Sumi in சமூகம்

கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் நிறுவன நாள் கொண்டாட்ட நிகழ்வு யாழில். வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் புகையிரத வீதியில் உள்ள நோர்த் கேற் ஜெற்விங் நட்சத்திர ஹோட்டலில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் கலாச்சார உறவுகளுக்கான இந்திய பேராயம் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இந்திய துணைத்தூதரகம் சங்கர் பாலசந்திரன் தலைமையில் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, ஐ,சி.சி. ஆர் புலமைப் பரிசில் தொடர்பான விழிப்புணர்வு பற்றிய பட்டிமன்றம், தேசிய கல்வியற் கல்லூரி தமிழ்துறை விரிவுரையாளர் லலீசன் குழுவினரின் பட்டிமன்றமும் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசியர்கள், திணைக்கள தலைவர்கள், எனப் பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers