விவசாய உற்பத்திகள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு

Report Print Navoj in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் "நாட்டிற்காக ஒன்றிணைவோம்" என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக விவசாய உற்பத்திகள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு - ஓமடியாமடு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது உரச்சட்ட மூலம், சேதனைப்பசலையின் முக்கியத்துவம், பசளையிடும் கால அளவுகள், அசேதனப்பசளையின் பிரயோகம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலக பிரதானி எச்.எம்.பி கிட்டிசேகர, ஜனாதிபதியின் மாவட்ட இணைப்பாளர் கோல்டன் பெர்னாண்டோ, தேசிய உரச்செயலாக உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம் சிராஜுன், விவசாய போதனாசிரியர் ஜூமாதின், வாகரை பிரதேச செயலாளர் கரண் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

Latest Offers