மட்டக்களப்பில் கிராம சக்தி வார நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் கிராம சக்தி வார நிகழ்வுகளில் பல்வேறு செயற்றிட்டங்கள் மூன்றாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வினை கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நிலையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்துமுகமாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 510 பேருக்கு இந்த நிலையான வாழ்வாதாரத்திற்காக ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா கடன் உதவியாக வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி கூட்டுறவு உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்துள்ளார்.