கட்டாக்காலி தொல்லையால் சோடை போகும் காரைநகர் கோடை விவசாயம்

Report Print Dias Dias in சமூகம்

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக யுத்தத்தினால் பாதிக்கபட்டு இடம்பெயர்ந்த விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டாக்காலி தமது வயல் நிலங்களிற்குள் நுளைந்து பயிர் நிலங்களை துவம்சம் செய்து விட்டு செல்கின்றமையினால் பெருந்தொகையான பயிர் நிலங்கள் சேதமடைகின்றதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எந்தவித நடவடிக்கையினையும் உரிய முறையில் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

கமநலசேவை குறித்த கட்டாக்காலிகளை பிடித்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers