கொஸ் மல்லி கொலை செய்யப்படுவதை இணையம் மூலம் பார்த்த மதூஷ்!

Report Print Murali Murali in சமூகம்

மொஹமட் ரிஸ்வான், கொஸ் மல்லியாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்துகொண்ட மாக்கந்துர மதூஷ், ரிஸ்வான் கொல்லப்பட்டதை போன்று கொஸ் மல்லியையும் கொலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் வைத்து கொஸ் மல்லி கொலை செய்யப்பட்டதாகவும், அதனை இணையம் ஊடாக மாகந்துர மதூஷ் பார்த்துள்ளார் எனவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து அண்மையில் நாடுகடத்தப்பட்ட கஞ்சிபானி இம்ரானிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மாக்கந்துர மதூஸ் உள்ளிட்டவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றை மொஹமட் ரிஸ்வான் என்ற நபர் நடத்திச் சென்றுள்ளார்.

குறித்த நிறுவனத்துக்கான முழுமையாக நிதியை செலுத்துபவர் மாக்கந்துர மதூஷ் என்பதுடன் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கஞ்சிபானி​ இம்ரான் இருந்துள்ளார்.

ரிஸ்வான் கொல்லப்பட்டதை போன்று கொஸ் மல்லியையும் கொலை செய்யுமாறு பிரபல போதைப்பொருள் கடத்தல்காரன் மாக்கந்துர மதூஷ் உத்தரவிட்டுள்ளார்.

மொஹமட் ரிஸ்வான், கொஸ் மல்லியாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்துகொண்ட மதூஷ் தனது சகாக்களுக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

இதன்படி, அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் வைத்து கொஸ் மல்லி கொலை செய்யப்பட்டதாகவும், அதனை இணையம் ஊடாக மாகந்துர மதூஷ் பார்த்துள்ளார்” என கஞ்சிபானி​ இம்ரான் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.