இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றமா?

Report Print Sujitha Sri in சமூகம்

விலை சூத்திரத்திற்கு அமைய இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் எரிபொருட்கள் முன்னைய விலைகளுக்கு அமைவாகவே விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போதே மேற்படி விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.