யாழ் தீவகப்பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை முறியடிப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ். வேலாணை, மண்டைத்தீவு பிரதேசத்தில் நில அளவை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட இருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று காலை ஒன்பது மணியளவில் கடற்படை முகாமிற்கு நிரந்தர காணியை சுவீகரிப்பதற்கு 18 ஏக்கர் 1ரூட் 10 பேர்ச்சஸ் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நில அளவை அதிகாரிகள் அங்கு சென்றிருந்த வேளை அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்கள் விடுதலை முன்னணியினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், மாநகரசபை உறுப்பினர் ஆகியோர் காணியை அளவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாரிய அளவிலான காணி அளவீடு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தமது எதிர்ப்பை கடிதம் மூலம் தெரிவிக்குமாறு நில அளவையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது, 1 பேர்ச்சஸ் காணியை கூட அளப்பதற்கு நாம் ஒருபோது அனுமதி மாட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.