மதுபான நிலையம் மூடப்படவுள்ளது

Report Print Gokulan Gokulan in சமூகம்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கைக்கு அமைவாக இம் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கடந்த வருடம் தமிழ் - சிங்கள புத்தாண்டு மற்றும் விசாக பூரணையை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு மதுபான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.