யாழில் தொடரும் ஆவா குழுவினரின் அட்டகாசம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ். மாணிப்பாய் பகுதியில் 3 வீடுகளுக்கு ஆவா குழுவினரால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 9 பேர் அடங்கிய ஆவா குழு குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்து, மூன்று வீடுகளுக்குள் மாத்திரம் புகுந்து அங்கிருந்த நபர்களை அச்சுறுத்தி, அவர்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரபினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனையடுத்து, முறைப்பாட்டிற்கமைவாக பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.