உங்கள் பிள்ளைகளின் வழிகாட்டுனர் நீங்களே! வாழைச்சேனையில் விழிப்பூட்டல் நிகழ்வு

Report Print Navoj in சமூகம்

ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று பெற்றோருக்கான விழிப்பூட்டல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களம் தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சின் மூலம் உங்கள் பிள்ளைகளின் வழிகாட்டுனர் நீங்களே என்ற தொனிப் பொருளில் இந்த விழிப்பூட்டல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது வளவாளர்களாக மனநல வைத்திய நிபுணர் வைத்தியர் டபிள்யூ.பிரசாத், றுகுணு பல்கலைக்கழக மாணவி உதயகுமார் டிலக்சிகா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியுள்ளார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றதுடன், இதில் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராசா, செயலக கணக்காளர் ஏ.டிலானி, செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் கோகிலா சிவானந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் செயற்றிட்டத்தின் கீழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் கிராமிய வங்கிகளினூடாக சுயதொழில் கடன் வழங்கும் திட்டம் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி, நாவலடி பிரதான வீதி தொடக்கம் புணாணை வரை வீதியோரங்களில் காணப்படும் குப்பைகளை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் பிள்ளைகள் என்ற தொனிப்பொருளில் ஆளுமை விருத்தி செயலமர்வுஒன்று இடம்பெற்றுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை இச்செயலமர்வு நடைபெற்றுள்ளது.

சிறுவர்களை போதைப்பொருள் பாவனைகளில் இருந்து காப்பாற்றுதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எதிர்காலத்தை இலகுவாக்கி கொள்ளுதல், சிறுவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை வழங்குதல், உள ரீதியாக சிறுவர்களை பாதுகாத்தல் போன்ற பலவிடயங்கள் சம்பந்தமாக இங்கு விரிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர், ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் அருணிலி சோமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.