கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு........

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விசேட கடுகதி ரயில் சேவை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருநது வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி ரயில் சேவையே யாழ்ப்பாணம் ஈடுபடுத்தப்படவுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்கு புறப்படும் கடுகதி புகையிரத சேவை நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

யாழ்ப்பாணம் சென்றடையும் குறித்த ரயில் நாளை மறுதினம் அதிகாலை 3.00 மணிக்கு கொழம்பு நோக்கி புறப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.