என் மனைவியை நான் தாக்கினேன்! எவரும் கேள்வி கேட்க முடியாது - பியூமி ஹங்சமாலியின் கணவன்

Report Print Steephen Steephen in சமூகம்

பியூமி ஹங்சமாலி தனது மனைவி எனவும் இதனால், அவரை தாக்கியது குறித்து எவரும் கேள்வி கேட்க முடியாது எனவும் அவரது கணவரான வேநுர ஹேஷான் என்பவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு குறித்து தனது முகநூலில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

சுற்றி இருப்பவர்கள் குழப்பமடைந்தால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் எனது மனைவியை தாக்கினேன் நீங்கள் ஏன் குழம்புகிறீர்கள்.

இலங்கையில் எவனும் மனைவியை தாக்கியதே இல்லையா…? இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்தது. இன்று நேற்று நடந்தது போல் பேசுகின்றனர். இது எமது குடும்ப பிரச்சினை முழு இலங்கையும் தலையிட வேண்டாம்.

பியூமி எப்படிப்பட்ட பெண் என்பதை உலகம் எனக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. பல வருடங்களாக நான் அவளுடன் வாழ்கிறேன்.

உலகத்திற்கு தேவையான வகையில் நாம் எவரும் வாழ்வதில்லை. எமக்கென்று தேவையான வகையில் நாம் வாழ்கிறோம் என வேநுர ஹேஷான் தனது முகநூல் பதில் குறிப்பிட்டுள்ளார்.