வினைத்திறனான சேவையை வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை உண்மையான வினைத்திறனான சேவையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எதிரே இன்று காலை ஆரம்பமாகிய இந்த போராட்டம் 2 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்குபற்றியிருந்தனர். இதன்போது முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் சேவைகளை சீர் செய்ய கோரி மகஜர் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் பிரதிகள் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.