புல்மோட்டை தள வைத்தியசாலைக்கான ஆம்புலன்ஸ் வண்டி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

புல்மோட்டை தள வைத்தியசாலைக்கான ஆம்புலன்ஸ் வண்டி இன்று கொழும்பு மாநகர மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் வேண்டுகோளுக்கு அமைவாக புல்மோட்டை தள வைத்தியசாலைக்கான புதிய போர்ட் (Ford) ரக நவீன வசதிகளுடைய WP LW 1952 இலக்கத்தை கொண்ட ஆம்புலன்ஸ் வண்டி சுகாதார சுதேசிய இராஜாங்க அமைச்சர் பைசல் காஸீமினால் இன்று வைபவரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது

மேலும் தவிஸ்ரீபுர,மொரவெவ,திருகோணமலை ஆதார வைத்தியசாலை போன்றவற்றிற்கும் இன்றைய தினம் ஆம்பலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா மூதூர் தள வைத்தியசாலைக்கான பென்ஸ் (Benz) ரக ஆம்புலன்ஸ் வண்டிகள் இன்னும் சில வாரங்களில் வழங்க பட இருப்பதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்துள்ளார்.