ருவான்வெல்ல பகுதியில் விபத்து: அறுவர் காயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை, கேகாலை பிரதான வீதியின் கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

ருவான்வெல்லையில் இருந்து அவிசாவளை நோக்கி, தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சாரதி உட்பட அறுவர் சிறு சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று பின் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.