வேரவில் மற்றும் வட்டக்கச்சி வைத்தியசாலைகளுக்கு நவீன நோயாளர் காவுவண்டிகள்

Report Print Suman Suman in சமூகம்

இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கென சுகாதார அமைச்சினால் மேலும் ஒரு தொகுதி அதிநவீன நோயாளர் காவுவண்டிகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் ஆகியோரது முயற்சியால் வருவிக்கப்பட்ட இந்த நோயாளர் காவுவண்டிகளை அவர்கள் இருவரும் இணைந்து வழங்கி வைத்துள்ளனர்.

இவற்றில் கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக நோயாளர் காவுவண்டிகள் இன்றிச் சிரமப்பட்டு வந்த வேரவில் மற்றும் வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலைக்கும் புதிய நோயாளர் காவுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகளின்போது வேரவில் வைத்தியசாலை நோயாளர் காவுவண்டி இல்லாது செயலிழந்து போனமை குறித்து வெள்ள நிலைமைகளைப் பார்வையிடவந்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் எடுத்துக்கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நோயாளர் காவு வண்டிகளைப் பெற்றுக்கொள்ளும் வடமாகாண வைத்திசாலைகள் விபரம்:

மன்னார் மாவட்டத்தில் வங்காலை மற்றும் பெரியமடு வைத்தியசாலைகள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை.

யாழ். மாவட்டத்தில் கொடிகாமம், அச்சுவேலி, வல்வெட்டித்துறை, அனலைதீவு, கோண்டாவில் சங்கானை, அம்பன், பண்டத்தரிப்பு, அளவெட்டி, வேலணை, மருதங்கேணி, கரவெட்டி, வட்டுக்கோட்டை, மானிப்பாய், இளவாலை ஆகிய வைத்தியசாலைகள் இன்றையதினம் நோயாளர் காவுவண்டிகளைப் பெற்றுக் கொண்டன.