மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலி

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரான் குளம் பிரதான வீதியில் பயணித்த துவிச்சக்கர வண்டி மீது அம்பாந்தோட்டையிலிருந்து வேகமாக வந்த வான் ஒன்று மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

கிரான்குளம், தர்மபுரத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஆறுமுகம் செல்லப்பா என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.