துர்நாற்றம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள வவுனியா வர்த்தகர்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதாக வர்த்தகர்கள், நகரசபை உப நகர பிதா சு.குமாரசாமியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பேருந்து நிலையத்தை அண்மித்துள்ள உணவகங்களின் கழிவுகள் பேருந்து நிலைய பகுதியிலுள்ள குப்பை தொட்டிகளில் அடையாளந்தெரியாதவர்களால் வீசப்பட்டுள்ளது.

இதனால் பேருந்து நிலையப் பகுதிகளிலும், அதனைச் சூழ உள்ள வர்த்தக நிலையங்களிலும் துர்நாற்றம் வீசி வந்துள்ளது.

இதையடுத்து உப நகர பிதா இன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பகுதியைத் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளுமாறு உப நகர பிதாவினால் சுத்தம் செய்யும் பணியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துர்நாற்றம் காரணமாக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்களினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.