ஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்த தம்பதியரின் மெய்சிலிர்க்க வைத்த செயற்பாடு!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு தம்பதி ஒன்றின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் நெகிழ்சி அடைந்துள்ளனர்.

ஜேர்மனிலிருந்து வருகை தந்த தம்பதி ஒன்று தமது 25 வது ஆண்டு திருமண தினத்தை வித்தியசமாக கொண்டாடியுள்ளனர்.

58 வயதான டியடோ வென்டவிமன் மற்றும் 56 வயதான டானிமரியா என்ற தம்பதியே இவ்வாறு திருமண ஆண்டினை கொண்டாடியுள்ளனர்.

இலங்கையிலுள்ள கடற்கரை உட்பட இயற்கை மீது அன்பு கொண்ட இந்த தம்பதி கடந்த 17 வருடங்களாக விடுமுறைக்கு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

கோக்கலவில் உள்ள ஹோட்டல் ஒன்றை இந்த தம்பதியினர் தெரிவு செய்து தங்கியியுள்ளனர்.

அதற்கமைய திருமண ஆண்டை கொண்டாட வந்த இந்த தம்பதி விகாரை ஒன்றில் பூஜை ஒன்றை நடத்தி அங்கு வந்தவர்கள் உணவு வழங்கியுள்ளனர்.