மடு தேவாலயத்திற்கு இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க திடீர் விஜயம்

Report Print Ashik in சமூகம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இன்று வரலாற்று சிறப்பு மிக்க மடு தேவாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க மடு அன்னையின் திருச் சொரூபம் வைத்தல் மற்றும் மடு திருத்தல பகுதியில் மரம் நடுதல் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி, இராணுவ அதிகாரிகள், அருட்தந்தையர்கள், மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.