வறட்சி காரணமாக 970 குடும்பங்கள் பாதிப்பு!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் 970 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

இதில் மாவட்டத்தின் வறட்சி நிலமைகள் தொடர்பாக ஆராயபட்ட போது தற்போது ஏற்பட்டிருக்கின்ற அதிகூடிய வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 970 குடும்பங்களைச்சேர்ந்த 3243 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கண்டாவளைப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 65 குடும்பங்களை சேர்ந்த 220 பேரும், பூநகரி பிரதேசத்தில் 905 குடும்பங்களை சேர்ந்த 3023 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 473 குடும்பங்களை சேர்ந்த 1487 பேருக்கான குடிநீர் விநியோகம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.