சிறுவர்களை காப்போம் என்ற தேசிய எண்ணக்கருவிற்கு அமைவாக ஆளுமை விருத்தி செயலமர்வு

Report Print Rusath in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 'நாட்டிற்காக ஒன்றினைவோம்' என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 'சிறுவர்களை காப்போம்' என்ற தேசிய எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் 'எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் பிள்ளைகள்' என்ற தொனிப்பொருளில் ஆளுமை விருத்தி செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த செயலமர்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறுவர்களை போதைப்பொருள் பாவனைகளில் இருந்து காப்பாற்றுதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எதிர்காலத்தை இலகுவாக்கி கொள்ளுதல், சிறுவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை வழங்குதல், உள ரீதியாக சிறுவர்களை பாதுகாத்தல் போன்ற பல விடயங்கள் சம்பந்தமாக விரிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.