போதை பொருளை தன்வசம் வைத்திருந்த நபர் கைது!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை பகுதியில் நாற்பது மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 40 மில்லி கிராம் ஹொரொயின் போதைப் பொருளுடன் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.