வவுனியாவில் இளைஞன் ஒருவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு!

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கற்குழி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞனொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவுடன், போதை ஒழிப்புப்பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்குழி பகுதியில் 510 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை உடமையில் மறைத்து வைத்திருந்த நிலையில், 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.