மாநகரசபையின் சோதனை நடவடிக்கை தொடரவுள்ளது

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு மாநகரசபையினர் உணவகங்களில் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகள் இந்த மாதம் நடுப்பகுதி வரையில் தொடரவுள்ளது.

இதனை நகர உணவுப்பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சுபாஸ் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தொடர்ந்தும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரையில் 65 வியாபாரத்தளங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது குற்றமுள்ளவர்களாக கண்டுபிடிக்கப்பட்ட 21 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.