வவுனியாவில் சலுகை கடன் திட்டம் தொடர்பில் விழிப்புணர்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் என்ர பிறைஸ் சிறிலங்கா என்னும் சலுகைக் கடன் தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு வளமான நாடு என்னும் தொனிப்பொருளில் நிதி அமைச்சினால் என்ர பிறைஸ் சிறிலங்கா என்னும் விசேட சலுகைக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ் வட்டி முழுவதையும் அரசாங்கம் செலுத்தும் வகையில் மாத்ய அருண, திரிசவிய, எரம்புவ கடன் திட்டங்களும், வட்டியில் முக்கால்வாசியை அரசாங்கம் செலுத்தும் வகையில் ரியசக்தி, கொவிநவோதய கட்ன் திட்டங்களும், வட்டியில் அரைவாசியை அரசாங்கம் செலுத்தும் வகையில் ரன் அஸ்வென்ன, ஜய இசுர உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள், பண்ணையாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், பட்டதாரிகள், பெண்கள் என பலரும் இதனை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சலுகைக் கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையை நிதி அமைச்சு கடந்த 50 நாட்களாக மேற்கொண்டு வருகின்றது. 50 நாளின் இறுதி தினமான இன்று வவுனியா நகரில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இளைஞர், யுவதிகள் இந்த சலுகை கடன் திட்டம் தொடர்பான சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோசங்களை எப்பியவாறும் வெற்றியின் பேரணி என்னும் பெயரில் நகர வீதியில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதுடன் கடன் திட்டம் தொடர்பான துண்டு பிரசுரங்களையும் விநியோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.