நண்பர்களுடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்! தமிழர் தலைநகரில் சம்பவம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
620Shares

தமிழர் தலைநகரான திருகோணமலையில், சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலப்பு பகுதியில் நீராட சென்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சூரநகர், வெருகல் முகத்துவாரம் பகுதியை சேர்ந்த ராஜா சதீஷ் (25 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சூரநகர் கலப்பு பகுதிக்கு தமது நண்பர்கள் ஏழு பேருடன் குறித்த இளைஞர் நீராட சென்ற போது, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதுடன், இதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.