இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! உங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அப்பிள், திராட்சை, ஆராஞ்ச் பழங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விடயம் அரச பகுப்பாய்வு திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

இதற்கு பயன்படுத்தப்படும் திரவம் இலங்கையில் புற்களை அழிக்க பயன்படுத்த தடை செய்யப்பட்ட இரசாயன பொருள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு கொண்டு வரப்படும் பழங்களில் தடை செய்யப்படும் திரவம் உள்ளதா என்பது தொடர்பில், அரச பகுப்பாய்வு திணைக்களம் அனைத்து மாவட்டங்களிலும் பழங்களின் மாதிரியை பயன்படுத்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.