இலங்கையில் நேர்ந்துள்ள சோக சம்பவம்! உயிரிழந்து பிறந்த குழந்தை

Report Print Sujitha Sri in சமூகம்

அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் நேற்று காலை பெண்ணொருவருக்கு குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடாபோலன பகுதியை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவருக்கே, அவரது முதலாவது குழந்தை இவ்வாறு இறந்து பிறந்துள்ளதாக தெரியவருகிறது.

கர்ப்பிணியான குறித்த பெண் அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் தனியார் சேவையின் மூலம் ஆலோசனைகளை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வைத்திய ஆலோசனைக்கு அமைவாக கடந்த ஐந்தாம் திகதி அவர் பிரசவத்திற்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உறவினர்கள் கூறுகையில்,

கடந்த ஐந்தாம் திகதி பிரசவத்திற்காக கர்ப்பிணியான அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். எனினும் நேற்று காலை வரையில் அவருக்கு எந்தவிதமான பரிசோதனைகளும் செய்யப்படவில்லை.

இதேவேளை நேற்று காலை குழந்தையை பிரசவித்த போதும் அது உயிரிழந்த நிலையிலேயே பிறந்தது. வைத்தியர்களின் கவனயீனத்தினாலேயே இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸிலும், வைத்தியசாலை பணிப்பாளரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குழந்தையை இழந்த பெண் தொடர்ந்தும் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.