ராஜபக்ஷர்களின் குடும்பத்திற்குள் நடப்பவை! தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஏற்படும் மாற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

அண்மைக்காலமாக ராஜபக்ஷர்களின் வீட்டில் நடக்கும் விசேட நிகழ்வுகள் நாட்டு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவையாக உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிறந்த நாள் நிகழ்வை மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் வித்தியாசமாக கொண்டாடியுள்ளது.

கடந்த 10 திகதி நாமல் ராஜபக்ச தனது 33வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.

அவரது பிறந்த நாளை பிரம்மாண்ட ஹோட்டல்களில் கொண்டாடாமல் முதியவர்களுடன் கொண்டாடியமை குறித்து அதிகம் பேசப்படுகிறது.

தங்காலையில் உள்ள விகாரையில் முதியவர்களை அழைத்து அவர்களுக்கு தானம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்ற நிகழ்வுகள், தற்போது மிகவும் எளிமையான முறையில் தங்காலையில் கொண்டாப்பட்டு வருகின்றது.

அடுத்து வரும் தேர்தல்களை இலக்காக கொண்டு தென்னிலங்கை மக்களின் நன்மதிப்பை பெறும் நோக்கில் இவ்வாறான எளிமையான கொண்டாட்டங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.