தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சுற்றிவளைப்பு! 614 பேருக்கு சிவப்பு அறிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்
133Shares

நாடளாவிய ரீதியில் 10,872 உணவகங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் நிலையங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 21 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், 2,821வர்த்தகங்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் சுகாதார சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10,872 உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அதில் 21 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் 2,821 வர்த்தகர்களுக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் 614 வர்த்தகர்களுக்கு சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.