ஆசிரியர்களே எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள்

Report Print Arivakam in சமூகம்

ஆசிரியர்களே எமது எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகளென பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, வேம்போடுகேணி பாடசாலை ஆசிரியர் சின்னப்பிள்ளை குலவீரசிங்கத்தின் மணிவிழா இன்று காலை பாடசாலை அதிபர் ஜீவரத்தினம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

நல்ல பிரஜைகளை உருவாக்குவதற்கு பாடுபடுபவர்களும் அதிகமான பங்களிப்புக்களை வழங்குபவர்களும் ஆசிரியர்களே.

இவர்களே எமது மாணவர்களுக்கு எமது இனம் மீதான அக்கறையை ஏற்படுத்துபவர்கள்.

அத்துடன் எமது இனத்தின் வரலாறுகளை எதிர்கால சந்ததிகளிற்கு கடத்த வேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சின்னப்பிள்ளை குலவீரசிங்கம் நீண்டகாலம் வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் வலயக்கல்வி உதவிப் பணிப்பாளர், பளை கோட்ட கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.