அரசாங்க அறிவித்தலையும் மீறி வவுனியாவில் மின்வெட்டு

Report Print Thileepan Thileepan in சமூகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற தன்மையினால் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில நேரம் நாடு பூராகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சினால் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், வவுனியாவில் நேற்று இரவு 10 மணி முதல் 11.30 வரை மின்வெட்டப்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள புதுவருடக் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் இம்மின்வெட்டினால் நிம்மதியாக கூட புதுவருடக் கொண்டாட்ட வேலைகளை செய்ய முடியவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.