இரவு வேளைகளில் ரோந்து பணிகளில் பொலிஸார்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் நகரில் தற்போது இரவு வேளைகளில் பொலிஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு இந்த ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதன்போது வெளிமாவட்டங்களிலிருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், வாகன சாரதிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், இதன்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் நடமாடுபவர்களை மறித்து பலத்த சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers