புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சியில் குருதிவழங்கல் நிகழ்வு

Report Print Yathu in சமூகம்

2019ஆம் ஆண்டின் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தினால் குருதி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பளையில் நேற்று திட்டமிடல் முகாமையாளர் ஓய்வு பெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் 30இற்கும் மேற்பட்ட மனித நேய கண்ணிவெடியகற்றுனர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் குருதி வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து இதய நோயினால் பாதிக்கப்பட்டு கண்ணிவெடியகற்றும் பணியில் இருந்து விலகிய சக பணியாளர் ஒருவருக்கு நிறுவனப் பணியாளர்கள் இணைந்து ஒரு தொகைப் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

மேலும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களின் 30 சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.