ஹட்டனில் குடைசாய்ந்து விபத்திற்கு இலக்கான முச்சக்கரவண்டி

Report Print Gokulan Gokulan in சமூகம்
43Shares

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

தலவாக்கலையில் இருந்து புத்தளம் நோக்கி இன்று காலை பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயங்களுக்குள்ளான சாரதி வட்டவலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி அதிக வேகமாக பயணித்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.