கந்தளாய் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கந்தளாய் பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் கந்தளாய் அந்நஜா அரபுக் கல்லூரி மண்டபத்தில் பிரதேச முக்கியஸ்தர்களுடன் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலானது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது கந்தளாய் அபிவிருத்திகள் மற்றும் திட்ட அமுலாக்கம் தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.

உட்கட்டமைப்பு ,கல்வி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான குறை நிறைகள் இங்கு சுட்டிக்காட்டப்பட்டன.

குறித்த பிரச்சினைகள் முக்கியஸ்தர்களால் அடையாளப்படுத்தப்பட்டு குறுகிய காலத்தில் திட்ட அமுலாக்கம் இடம் பெறுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இக் கலந்துரையாடலில் கந்தளாய் பிரதேச சபையின் உப தவிசாளர் சட்டத்தரணி மதார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.