மட்டக்களப்பில் தொழில் வழிகாட்டி பயிற்சி நிறுவனம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

Report Print Rusath in சமூகம்

இலங்கையில் இளம் சந்ததிக்கு வளமான எதிர்காலத்திற்காக நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடையும் நோக்கில் மட்டக்களப்பு அரசாங்க விடுதியில் இன்று காலை ஜனாதிபதியினால் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கை தொழில் வழிகாட்டி பயிற்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு திறன்களை வலுப்படுத்தி இலங்கை தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் ஊடாக இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக இவ் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டு அதன் உரிமை பத்திரம் ஜனாதிபதியினால் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திறன்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு திறன் மேம்பாடு அமைச்சு பொருளாதார அபிவிருத்தி போன்ற அமைச்சுக்கள் இதனுடன் இணைந்ததாக அதன் பணிகளை மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்காக முன்னெடுக்கவுள்ளது.

இவ் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி தனது விஜயத்தின் ஞாபகார்த்தமாக நிலைய வளாகத்தில் மர கன்றினை நாட்டிவைத்தார்.

அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மற்றும் அரச உயர் அதிகாரிகள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள், இலங்கை தொழில் வழிகாட்டி பயிற்சி நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.