ஈழத்தமிழர்களின் நிலை குறித்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் முக்கிய கலந்துரையாடல்

Report Print Nesan Nesan in சமூகம்

ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை என்ன என்பது தொடர்பில் பிரான்ஸ் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியின் பக்க அறையொன்றில் இன்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் மீதான ஆய்வுக் குழு இந்த கலந்துரையாடலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

யுத்தம் நிறைவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு பின்னர் ஈழத் தமிழர்களின் உண்மை நிலைமை என்ன? அங்கு வாழும் தாயக உறவுகளுக்கு புலம்பெயர் தேசங்களில் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அந்தந்த நாடுகள் ஊடாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

முரண்பாட்டின் முடிவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மனித உரிமைகள் பதிவு என்ன? நிலைமாறு கால நீதி மற்றும் தாயகத்தில் வாழும் மக்களின் அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்கென பல தமிழ் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.

மிஸ்டர் இக்பால் மகம்மது காசிம், 1980 மற்றும் 1990 களில் நான்கு ஜனாதிபதி பதவிக் குழுக்கள் உட்பட, பல்வேறு பதவிகளை வகித்த பின்னர் ஓய்வு பெற்ற இலங்கை சிவில் சர்வீஸ் அலுவலர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசகர், ஆசியா நிறுவன ஆலோசகர் இலங்கை சிறந்த மனிதர்களின் சுதந்திர சர்வதேச குழுவுக்கு ஆலோசகர் ஜெனீவா மனித உரிமைகள் சபையின் ஆசியா பசிபிக் பிரிவுக்கு ஆலோசகர் Yves போவி ஆகியோர் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இலங்கையின் தமிழ் பிரதேசத்தில் உள்ள சூழ்நிலையின் சாட்சி சுரேஷ் தர்மலிங்கம், பேராசிரியர் - மனித உரிமை ஆர்வலர் சி. வி. கிருபாகரன், செயலாளர் நாயகம், தமிழ் மனித உரிமைகள் மையம்-ஐரோப்பா விஜயகுமார் நவநீதன், திவாகுமார் சாருக்கா மற்றும் புலம் பெயர் தமிழ் உறவுகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.