காணி அமைச்சின் கீழ் அரச அச்சகம்

Report Print Ajith Ajith in சமூகம்

அரச அச்சகத்தை காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு கீழ் கொண்டு வரும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இதுவரை காலமும் அரச அச்சகம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது அது ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை அரச அச்சகம் காணி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.