குச்சவெளியில் திருட்டு மின்சாரம் பெற்ற ஒருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி, கல்லரப்பு, பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பிராந்திய மின்சார உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் குச்சவெளி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே பிரதான கம்பியினுடாக திருட்டு மின்சாரம் பெற்று வந்த ஒருவரை கைது செய்துள்ளனர் என தெரியவருகின்றது.

மேலும் குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.