தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஒரு புதிய முயற்சி!

Report Print Dias Dias in சமூகம்

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு சர்வதேச விசாரணை வேண்டுமென நியூசிலாந்து தமிழ் அமைப்பொன்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்று இலத்திரனியல் முறையில் கையெழுத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஈழ தமிழர்கள் வாழும் முதல்தர நாடுகளில் நியூசிலாந்து நாடும் ஒன்று என கணிக்கப்படுகிறது. பல் மொழி, பல் கலாச்சாரம், உயர்ந்த மனித உரிமை செயற்பாடுகள் தனிமனித சுதந்திரம், கல்வி, பொருளாதார சமநிலை அமைதியானதும் பாதுகாப்பனதுமான வாழ்க்கை முறை போன்ற பல விடயங்களில் முன்னணி வகிக்கும் நாடுகளில் நியூசிலாந்து நாடும் அடங்கும்.

அந்த வகையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியும் இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு கொல்லப்பட்ட அனைவருக்கும் நீதி கோரும் வகையில் நியூசிலாந்து தமிழ் அமைபொன்று இவ்வாறு கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

எனவே எமது உறவுகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் உங்களது கையெழுத்துக்களையும் பதிவிடுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கையெழுத்தை பதிவிட இங்கே அழுத்துங்கள்...