பேருந்து பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

பண்டிகை காலத்தில் அதிக கட்டணங்கள் அறவிடும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதாக தெரியவரும் பட்சத்தில் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், 011 7555555 மற்றும் 077 1056032 ஆகிய கைபேசி இலக்கங்களுக்கும் அழைத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

பண்டிகை காலத்தின் போது விசேட போக்குவரத்து சேவைகள் அமுல்படுத்தப்படுகிறது. இவ்வாறு சேவையில் ஈடுபடும் பேருந்துகளே அதிக கட்டணங்களை அறவிடுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அமைவாகவே பொதுமக்களுக்காக இவ்வாறு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேருந்துகளில் அதிக போக்குவரத்து கட்டணங்கள் அறவிடப்படும் பட்சத்தில், அவர்களின் வீதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers