புத்தாண்டில் நடந்த கொடூரம் - அதிகாலையில் இருவர் படுகொலை

Report Print Gokulan Gokulan in சமூகம்

மொனராகலையில் இருவர் கூரிய ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவனகல - நுகேகலயாய பகுதியில் இன்று அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் 39 மற்றும் 54 வயதான நபர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

சிங்கள புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.