வாழைச்சேனையில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற சிலுவைப்பாதை தியானம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் வாழைச்சேனை, கல்குடா கத்தோலிக்க ஆலயப்பங்குகள் சேர்ந்து நடத்தும் திறந்தவெளி சிலுவைப்பாதை தியானமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கல்குடா புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் இருந்து குறித்த சிலுவைப்பாதை தியானம் ஆரம்பமாகியுள்ளது.

அதன் பின்னர் பாசிக்குடா வீதி வழியாக சென்று பேத்தாழை மற்றும் வாழைச்சேனை பிரதான வீதி ஊடாக வாழைச்சேனை தூய திரேசாள் ஆலயத்தினை சிலுவைப்பாதை திருயாத்திரை சென்றடைந்துள்ளது.

தொடர்ந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் சிலுவை பாதை தியானம் முடிவடைந்துள்ளது.

இந்த தியானத்தின்போது பெருந்திரளான கத்தோலிக்க மக்கள் மற்றும் அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.